நான் செக்கடி குளம் பேசுகிறேன்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.
நான் செக்கடி குளம் பேசுகிறேன்..!

என்னை யார் என்று தெரிகிறதா! நான் தான் உங்கள் ஊர் செக்கடி குளம்!

நான் அதிரையின் வரலாற்றை தொன்று தொட்டு சுமந்து வந்தவன். அதிரையின் மத்திய பகுதியில் வாழும் மக்களின் நீர் ஆதாரத்திற்க்கு மிகவும் முக்கியமாக இருந்தவன்.
பல வருடங்களுக்கு முன், காலை பல் துலக்குவதில் இருந்து அனைத்து வித நீர் தேவைக்கும் என்னை உபயோகித்தீர்களே என்னை உங்களுக்கு நியாபகம் இல்லையா?
இளைஞர்களே! வெள்ளிகிழமையானால் காலையிலே சோப்புக்கட்டிகளுடன் நீராடுவதற்க்கு என்னை நாடி வரூவீர்களே! என்னை உங்களுக்கு தெரியவில்லையா?
அதிரையின் மையப்பகுதியில் அழகிய செக்கடி பள்ளிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாய், துள்ளிடும் மீன்களுடன். நீர் ததும்ப கம்பீரமாய் காட்சியளித்தேனே என்னை உங்களுக்கு தெரிகிறதா?
இவ்வாறு உங்களுக்கு பல காலம் உதவியாக இரூந்த நானும் என்னுடைய நண்பர்களான ஆலடிக்குளம், மரைக்கா குளம், செடியன் குளம், மண்ணப்பன் குளம் போன்றவர்களை நீங்கள் மறந்ததற்க்கு காரணம் யாதோ?
விஞ்ஞான வளர்ச்சியால் புதிதாய் வந்த நீர் மூழ்கி பம்புகளை தேர்ந்தெடுத்து எங்களை மறந்துவிட்டீர்களே! இது நியாயமா?
வருடா வருடம் மழை நீரை தேக்கி உங்களுக்கும் பூமிக்கும் தந்தோம்…அது நாங்கள் செய்த தவறா?..இல்லை நீர் ததும்ப காட்சியளித்து ஊரை குளுமையாக வைத்திருந்தது தவறா?
மூன்றாண்டுகள் தண்ணீர் இல்லாம வறண்டு கிடந்த எங்களுக்கு சில மாதம் முன்பு தண்ணீர் வருகிறது என்றீர்கள்….நாங்களும் எதிர்பார்த்து காத்திருந்து வந்தது ஆற்று நீர் அல்ல, கானல் நீர்.! கண் மூடி திறப்பதற்க்குள் அது என்னை விட்டு மறைந்து விட்டது!
மீன்கள் துள்ளி விளையாடும் என் மீது மாணவர்கள் கால்பந்து விளையாடுகிறார்கள்..! தற்பொழுது விளையாட்டு மைதானமாக இருக்கும் நாங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை..!
உங்கள் முன்னோருக்கு பல காலம் நீர் ஆதரமாய் இருந்த எங்களைக் காத்திடுங்கள்..! 

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்! 

குளங்களை காப்போம்!    
நீர் வளம் அடைவோம்!
பொது நலம் கருதி வெளியிடுவோர்..
அதிரை பிறை
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author