குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோவில்களை சுத்தம் செய்த இஸ்லாமியர்கள் (வீடியோ இணைப்பு)

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல மாவட்டங்களில் கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. இந்நிலையில் அங்கு சென்னை வெள்ளத்தின் போது நிகழ்ந்த மதநல்லிணக்க சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்துமத கோவில்களை ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து சுத்தப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அத்துடன் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளையும் வழங்கி வருகின்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு மோடி ஆட்சியின் போது ஏற்பட்ட குஜராத் கலவரத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அங்கு நிகழ்ந்துள்ள இந்த மதநல்லினக்க சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகின்றன.

Close