அதிரை அன்றும் இன்றும் (கலாச்சாரம்,மக்கள்)

அதிராம்பட்டினம் மக்களில் எழுபது சதவீதம் பேர் முஸ்லீம்கள்.அவர்கள் இஸ்லாமிய ஓரிரைக் கொள்கையை கடைப்பிடித்து வாழ்கின்றனர்.அதிரையில் தெருவிற்க்குத் தெரு மசூதிகள் உள்ளன.அவற்றில் தொழுகை நேரம் வந்து விட்டால் பாங்கு ஊர் முழுவதும்
ஒலிக்கும்.

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் மக்கள் உற்ச்சாகமாக குளித்து நல்ல உடைகள் அனிந்து ஒன்றாக குத்பாவிற்க்கு சென்று தொழுவதும் பின்னர் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வருவார்கள். அதிரையில் பிற ஊர்கள் போல் இல்லாமல் அரபு நாடுகள் போல் வெள்ளிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு பொது விடுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

  அதிரை மக்களின் உடைக் கலாச்சாரதைப் பற்றிக் கூறவேண்டும் என்றால்,ஆண்கள் வெள்ளை லுங்கியும் சட்டையும் அணிவது வழக்கம்,மாணவர்கள் மற்றும் வேளைக்குச் செல்பவர்கள் மட்டும் பேண்டு சட்டை அனிவார்கள்.பெண்கள் முழு ஹிஜாபுடன்(முழு உடலையும் மறைத்தவாரு) அணிந்திருப்பார்கள்.

   அதிரை மக்கள் பிற ஊர்களில் திருமண உறவுகளை வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

Close