சீமானை அழைத்து அதிரையில் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு!

அதிரையில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் சே.முகமது மீராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பதற்கும், அலுவலகம் மற்றும் 5 இடங்களில் கொடியேற்றுவதும், அடுத்த கூட்டத்தில் நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தி சீமான் அவர்களை வரவழைத்து
அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

இதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1.ரேஷன் கார்டு கெடுபிடிகள் மற்றும் ரத்து போன்றவற்றை செய்துவரும் மத்திய மாநில அரசை மிக வண்மையாக கண்டிக்கிறோம்.

2.அப்துல் கலாம் சிலை வைப்பு மற்றும் பகவத்கீதையும் காவி நிறத்தில் வண்ணம் பூசியதையும் கண்டிக்கிறோம்.

3.பேரூராட்சி பணிகள் முடங்கி கிடப்பதால்.
விரைவாக உயர்நீதிமன்ற தீர்ப்பானையை வைத்து உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு தேர்தல் கமிஷன் மற்றும் மாநில அரசை கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு,

நாம் தமிழர் கட்சி, அதிரை கிளை

Close