சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுவனுக்கு அதிரையர்களால் ₹50 ஆயிரம் நிதியுதவி!

மாற்று சிறுநீரகம் செய்து கொண்ட சகோதரனுக்கு மருத்துவ உதவி வேண்டி 1/7/2017 அன்று நமது அதிரை பிறை மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தது.

அதனடிப்படையில் நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களால் வழங்கப்பட்ட 48,000 ஆயிரமும், வீட்டு வாடகைக்கு மாத மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்ட சகோ வின் 2000 ஆயிரமும் சேர்த்து மொத்த 50,000 ரூபாய் பணமும் உரியவர்களிடம் வழங்கப்பட்டது.

இதனை SISYA வின் தலைவர்.அஹமது அனஸ் மற்றும் SISYA வின் செயளாலர்.முஹம்மது சலீம், SISYA உறுப்பினர் அபுபக்கர் ஆகியோர் வீடு சென்று அந்த சகோதரனின் தாயாரின் முன்னிலையில் உதவித் தொகையை வழங்கினர்:

உதவி செய்த நல்லெண்னம் கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் மஜ்லிஸ் கார்டன் நண்பர்கள் மூலம் மனமார்ந்த நன்றினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தாங்களின் உன்னதமான உதவியினை வாரி வழங்குமாறு பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Close