குவைத்தில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள்..!

குவைத் நாட்டில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய அரசு தொலைத்தொடர்பு துறை யின் குவைத் நாட்டின் திட்ட பணிகளான தொலை தொடர்புத் துறையில் கட்டுமான பணிக்கு சிவில் இன்ஜினியர், டெலிகம் இன்ஜினியர், கேபிள் பொருத்துவர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆட் டோகாட் ஆபரேட்டர், கொத்தனார், கார்பெண்டர், ஸ்கில்டு லேபர், ஓட்டுனர், ஊர்தி பழுது பார்ப்பவர், சமையலர் தேவைப்படுகின்றனர்.

மேற்கண்ட பணிக்கு விருப்பம், தகுதியிருந்தால் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் ஒரு போட்டாவை அனுப்ப வேண்டும்.

அல்லது ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலகம், திரு.வி.க, தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை என்ற முகவரியில் உள்ள தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல் அறிய   044-22502267 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Close