விசிட் விசாவில் துபாய்க்கு வேலை தேடி செல்வோருக்கு எச்சரிக்கை

வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் குறிப்பாக துபைக்கு விசிட் விசாவில் சென்று அங்கு வேலை தேடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் போலி விசா மூலம் துபையில் பலர் ஏமாற்றப்படுவதாக துபை இந்திய தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் போலி விசாவில் தங்கியிருந்த பெண்கள் உடபட சுமார் 27 இந்தியர்கள் இந்திய தூதரகத்தால் மீட்கப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல புகார்கள் இருப்பதாக இந்திய தூதரக அதிகாரி விபுல் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலையுடன் உரிய ஆவணங்களின் அடிப்படையில் அமைந்த விசாவில் மட்டுமே இந்தியர்கள் துபைக்கு வர வேண்டும் என்றும் சுற்றுலா விசாவில் வேலை தேடி துபைக்கு யாரும் வரவேண்டாம் என்றும் விபுல் தெரிவித்துள்ளர்.

Close