டாக்டர்ஸ் கொஞ்சம் புரியிரமாரி எழுதுங்க.. ப்ளீஸ்

மருந்து சீட்டுகளை டாக்டர்கள் கொட்டை எழுத்துகளில் எழுதுவதற்கான 

சட்டம் விரைவில் வர உள்ளது.நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள், அவர்களுக்கான மருந்துகளை துண்டு சீட்டில் எழுதி கொடுப்பார்கள். இதில் எழுதப்படும் கையெழுத்து யாருக்கும் புரியாத வகையில் இருப்பது சகஜமான ஒன்று. 

இதனால், சில நேரங்களில் மருந்து கடைக்காரர்கள் குழப்பம் அடைந்து, டாக்டர் எழுதி கொடுக்கும் மருந்துக்கு பதிலாக அதே போன்ற உச்சரிப்பு கொண்ட வேறு மாத்திரை, மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பதால் பெரிய ஆபத்துகள் ஏற்படுகின்றன.

இதையடுத்து, எல்லாருக்கும் புரியும் வகையில், மருந்து சீட்டுகளில் டாக்டர்கள் எழுத்துகளை கேபிடல் லெட்டரில் எழுத சட்டம் கொண்டு வரும்படி பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்து விட்டது.

Close