உ.பி யில் ஹஜ் பயணிகள் தாக்கப்பட்டது உண்மையா?

முகநூலிலும், வாட்ஸ்அப், சமூக ஊடகங்களிலும் உ.பி. மாநிலத்தில் ஹஜ் யாத்திரீகர்கள் தாக்கப்பட்டதாக புகைப்படங்கள் பரப்பபட்டு வருகின்றன. இதுகுறித்து தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இந்த சம்பவம் அங்கு நடைபெற்றதா என்று உ.பி. மாநிலத்தில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் செய்தியாளர்களிடம் விசாரித்த போது புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருந்த எந்தவொரு ஹாஜியும் தாக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. மேலும் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு பீகார் மாநிலம் முசப்பர்பூர் நகரில் இரு குழுக்களுக்கிடையே நடைபெற்ற கலவரத்தில் காயமடைந்தவர்கள் மருத்துமனையில் இருந்த படம் ஹாஜிகள் தாக்கப்பட்டது போல் சித்தரிக்கப்பட்டு பரப்பபட்டு வருவதாகவும்வ அவர்கள் தெரிவித்தார்கள். இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உ.பி. மாநில் காஜியாபாத்தில் கடந்த சமாஜ்வாதி ஆட்சியின் போது 2016ல் ஹஜ் பயணிகளுகென சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. இந்த ஹஜ் இல்லம் ஹாஜிகள் தங்குவதற்கென இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இந்த ஹஜ் இல்லம் கட்டப்பட்டது குறித்து தேசீய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்த இல்லத்தை இந்த ஆண்டு ஹஜ் செல்லும் பயணிகளுக்காக திறக்க உ.பி. அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜீலை 30 அன்று நஸீம் கான் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக் காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் எந்த ஒரு ஹஜ் பயணியும் பங்குக் கொள்ளவில்லை. இது தான் எதார்த்தமான உண்மை.

இதை திரித்து புனித ஹஜ் பயணிகள் உ;பி. தாக்கப்பட்டதாக செய்தியின் உண்மை தன்மை அறியாமல் பரப்புவது முஸ்லிம்களின் பண்பாடு அல்ல.

தவறான பதிவை செய்தவர்கள் தங்களை திருத்திக் கொள்ளட்டும்.

பொய்சகளை மெய்களாக பரப்புவதை லட்சியமாக கொண்டு செயல்படும் சங்கிகளின் வழிமுறை நமக்கு வேண்டாமே”

அன்புடன்
எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Close