அதிரை மக்களே! நாம் எல்லாம் முட்டாள்களா…? (படங்கள் இணைப்பு)

அதிரைக்கு வெப்பத்தில் இருந்து விடை கிடைத்தது போல் நேற்று இரவு சுமார் 8:45 மணியளவில் 11:15 மணி வரை பலத்த மழை பெய்தது. சாலையெங்கும் வெள்ளம் போல் நீர் நிரம்பி ஓடின.

அதே வேலையில் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இருப்பினும் வெட்பத்திற்க்கு மத்தியில் கிடைத்த இம்மழை அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. நேற்றைய தினம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக அதிரையில் ஒரே இரவில் 13 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க அதிரை காட்டுக்குளத்தை தூர்வாரி அதனை சுற்றிலும் நடைபயிற்சி மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் தரமரற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அலெட்சியமாக பணிகள் கையாளப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த ஒரே மழையில் இந்த நடைபயிற்சி மேடை உருக்குலைந்துவிட்டது.

கற்கள் பெயர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன. மக்களின் பல கோரிக்கைகளுக்கு பிறகு பல லட்சங்கள் செலவில் செய்யப்படும் இது போன்ற அரசு நலத்திட்டங்களில் ஊழல் நடைபெறுவதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். சாலை அமைப்பு திட்டங்களாகட்டும், வடிகால் திட்டங்களாகட்டும் அந்த பணிகள் முடிவடைந்த ஒரு வருடத்தில் அது பழுதடைந்துவிடுகிறது.

இதற்கு என்ன வழி என்று தெரியவில்லை…? இது அதிகாரிகளின் மீதான குற்றமா… அல்லது அதனை செய்யும் ஒப்பந்ததாரர்களின் மோசடியா… என்று புரியவில்லை…

மொத்தத்தில் மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர்…

Close