அதிரையில் அதிரடி காட்டிய அசத்தல் மழை (படங்கள் இணைப்பு)

அதிரைக்கு வெப்பத்தில் இருந்து விடை கிடைத்தது போல் நேற்று இரவு சுமார் 8:45 மணியளவில் 11:15 மணி வரை பலத்த மழை பெய்தது. சாலையெங்கும் வெள்ளம் போல் நீர் நிரம்பி ஓடின.

அதே வேலையில் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இருப்பினும் வெட்பத்திற்க்கு மத்தியில் கிடைத்த இம்மழை அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. நேற்றைய தினம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக அதிரையில் ஒரே இரவில் 13 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று நேற்றைய தினத்தை போன்று இஷா தொழுகைக்கு பிறகு இதமான மழை பொழிந்தது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதிரையில் 2 வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Close