அதிரையில் ரயில்வே பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது! (படங்கள் இணைப்பு)

காரைக்குடி- திருவாரூர் இடையே உள்ள 145 கி.மீ. தூரத்தை அகல பாதையாக்கும் பணி 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருவதால் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, குடந்தைக்கு அடுத்தபடியாக பெரிய நகரம் பட்டுக்கோட்டை.  வளர்ந்து வரும் நகரம். நகரை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் விவசாயம் முக்கிய தொழில்.

இதற்கு அடுத்தபடியாக விளங்குவது மீன்பிடி தொழில். ஆங்கிலேயர் ஆட்சியில் அதாவது 114 ஆண்டுகள் முன்பிருந்தே 1902 அக்டோபர்  20ல் துவங்கி இங்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 1902ம் ஆண்டு மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மீட்டர்கேஜ் பாதையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. அன்று முதல் பட்டுக்கோட்டை சென்னையுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டது.

தற்போது அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த திட்டம் அதிரை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தனியார் சொகுசு பேரூந்துகளில் அதிகமாக கட்டணம் வசூல் செய்வதினால் பெரும்பாலான மக்கள் அரசு பேரூந்தில் பயணிக்கின்றார்கள்.

அதில்  அரசு பேரூந்துகள் தரம் குறைந்ததாகவே இருப்பதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். ரயில் சேவை துவங்குவதன் மூலம் மக்களின் துயர் நீங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Close