ஜித்தாவில் அதிரை ராஃபியா அவர்களுக்கு பிரிவு உபசார விழா! (படங்கள் இணைப்பு)

சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள அய்டா அமைப்பின் தலைவர் ரஃபியா அவர்கள் பணி மூப்பு காரணமாக இந்தியா திரும்புவதை அடுத்து அவர்களுக்கு அய்டா சார்பில் பிரிவுபச்சார விழா நடைபெற்றது.

சவூதி அரேபிய ஜித்தாவில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து பணி மூப்பு காரணமாக ஓய்வு பெறுவதை அடுத்து இந்தியா திரும்பவுள்ளார். அவருக்கு அய்டா அமைப்பு சார்பில் பிரிவுபச்சார விழா ஜித்தா லக்கி தர்பார் உணவக ஆடிட்டோரியத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவில் அய்டாவின் செயலாளர் சம்சுதீன் , பொருளாளர் அப்துல் அஜீஸ், இணை பொருளாளர் அபூபக்கர் மற்றும் இணை செயலாளர் மீராசா ரஃபியா, ஜெய்லானி, இன்னும் பல உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அய்டாவின் ஆலோசகர் ஜஃபருல்லாஹ் வாழ்த்துக் கவிதை படித்தார்.

இறுதியில் ரஃபியா அஹமது அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள் இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விழாவில் அய்டா உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close