அதிரை செடியன் குளம் தூர்வாரும் பணி தீவிரம்! (படங்கள் இணைப்பு)

அதிரைக்கு வெப்பத்தில் இருந்து விடை கிடைத்தது போல் நேற்று முன் தினம் தமிழகத்திலேயே அதிகபட்சமாக அதிரையில் ஒரே இரவில் 13 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக அதிரையில் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் இஷா தொழுகைக்கு பிறகு இதமான மழை அதிரையில் பொழிந்தது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதிரையில் 5 வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்ததால் பல மாதங்கள் வெயிலால் வறண்டு கிடந்த அதிரை குளங்களில் லேசாக தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதையடுத்து அதிரை செடியன் குளத்தை தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Close