கைவிட்ட அதிரை பேரூராட்சி! கையில் எடுத்த மக்கள்! (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரை தெருவில் உள்ள சாலை ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளம் ஏற்பட்டது. பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமிகளும் இந்த வழியாக சென்று வரும் நிலையில்  மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த சாலையை சீரமைத்து பொதுமக்களுக்கு நல்ல வழித்தடத்தை அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு அதிரை பிறை தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இருப்பினும் அதிரை பேரூராட்சி இந்த விசயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் அதிர்ப்தியடைந்தனர். இதையடுத்து பேரூராட்சியின் மீது நம்பிக்கை இழந்த அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த செலவில் இந்த சாலையை சீரமைத்துள்ளனர்.

பொதுமக்களுக்காக பணியாற்ற வேண்டிய அதிரை பேரூராட்சி முடங்கிக்கிடப்பதால் மக்கள் தங்கள் அடிப்படை தேவையை கூட கேட்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Close