அதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்!

அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொதுமருத்துவ முகாம் எதிர்வரும் ஞாயிறு அன்று காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

இதில் உடல் எடை, இரத்த அழுத்தம், சர்க்கரை, ஈ.சி.ஜி ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் இருதய மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

Close