அதிரையில் டெங்குவை ஒழிக்க ரெட் கிராஸ் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன. அதிரையிலும் பலர் மர்ம காய்ச்சல்களின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டெங்கு வை ஒழிக்கும் முயற்சியாக அதிரை பேருந்து நிலையில் ரெட் கிராஸ் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதிரை ரெட் கிராஸ் தலைவர் மரைக்கா இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற அங்கு வரும் பயணிகள் பொதுமக்களுக்கு நிலவேம்பு காசாயம் வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்தினர்.

Close