அதிரை சி.எம்.பி லேனில் வெட்டப்பட்ட வாய்க்கால் மூடப்படாததால் பொதுமக்கள் அவதி..!

அதிரையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குளங்களுக்கு தண்ணீ ர் கொண்டு வருவதற்காக சி.எம்.பி வாய்க்கால் தூர்வாரப்பட்டது நாம் அறிந்ததே. இதில் நமதூர் மரைக்கா குளத்துக்கு தண்ணீர் கொண்டுவருவதற்க்காக வி.கே.எம் ஸ்டோர் அருகே கடந்து செல்லும் சி.எம்.பி. வாய்க்காளில் இருந்து தனியாக ஒரு கிளை வாய்க்கால் வெட்டப்பட்டு அதில் இருந்து மரைக்கா குளத்துக்கு தண்ணீர் வந்ததும் நாம் அறிந்ததே. 
இந்த குளங்களுக்கு தண்ணீர் கொண்டிருக்கும் போது சில சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் தண்ணீர் வரத்து படி படியாக குறைந்து இப்பொழுது முற்றிலும் நின்று விட்டது.  தற்பொழுது இந்த மரைக்கா குளத்துக்காக வெட்டப்பட்ட வாய்க்காளை அப்பகுதி மக்கள் சாலையோர குப்பை தொட்டியாக மாறிவிட்டது எனலாம்.
 மேலும் இதில் தோண்டப்பட்ட கற்கள் சாலையில் கிடப்பதால வாகன ஓட்டிகள் பெரிதும் துயரடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் மிதிவண்டியில் செல்லும் பள்ளி மாணவர்கள் அடிக்கடி இந்த பகுதியில் சறுக்கி கீழே விழுவது வழக்கமாகியுள்ளது. 
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் தக்க நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்களின் சார்பிலும் அதிரைபிறை.இன் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: M.I.அப்துல் ஜப்பார்
Close