கேஸ் பேக் ஆஃபருடன் ஜியோ ரீசார்ஜ் செய்யலாம்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

பேடிஎம், மொபி க்விக், அமேசான் பே என அனைத்து ஆன்லைன் பேமெண்ட் நிறுவனங்களும் கேஷ்பேக் ஆஃபர்களை அள்ளித் தருகின்றன. அடுத்த முறை நீங்கள் உங்கள் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்யும்போது இதையும் கவனித்து ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோ நிறுவனமும் ‘ஜியோ மணி’ என்ற பேமெண்ட் வசதியையும் தருகிறது. பயனர்களை அதிலிருந்து வெளியிழுத்து, தங்கள் சேவைகளை பயன்படுத்த வைப்பதே இந்த கேஷ்பேக்கின் நோக்கம். அதனால், தாரளாமாகவே கேஷ்பேக் தருகின்றனர்.

பேடிஎம் (PayTM):
குறைந்தது 100ரூபாய்க்கு பேடிஎம்மில் ரீசார்ஜ் செய்தாலே கேஷ்பேக் கிடைக்கும். 100ரூபாய் ரீசார்ஜுக்கு 15 ரூபாய்; அப்படியே அதிகரித்துச் சென்று, அதிகபட்சமாக 300ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 76 ரூபாய் கேஷ்பேக் தருகிறது பேடிஎம். வழக்கம்போல, ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்தில் உங்கள் பேடிஎம் கணக்கில் கேஷ்பேக் தொகை வந்துவிடும். இதற்கான ப்ரமோ கோடு : PAYTMJIO

மொபி க்விக் (Mobi Kwik):
மொபி க்விக் இன்னும் தாராளம். மொபி க்விக் மூலம் இதுவரை ரீசார்ஜ் செய்திடாத புதிய பயனர்கள், 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 159 ரூபாய் கேஷ்பேக் தருகிறது. இதற்கான ப்ரமோ கோட்: NEWJIO. அடுத்தடுத்த ரீசார்ஜுகளுக்கு 59 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். அதற்கான ப்ரமோ கோட்: JIOMBK

அமேசான் பே (Amazon Pay):
309 அல்லது அதற்கும் மேற்பட்ட ரீசார்ஜ்களுக்கு மட்டுமே அமேசான் பே கேஷ்பேக் தருகிறது. ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 19 வரையில் செய்யப்படும் முதல் ரீசார்ஜுக்கு 99ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். அதன் பிறகு செய்யப்படும் ரீசார்ஜுக்கு 20 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இந்த ஆஃபர் நவம்பர் 30, 2017 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரீசார்ஜ் செய்த 7 நாள்களுக்கு இந்த கேஷ்பேக் அக்கவுண்டுக்கு வரும்.

ஃபோன்பே (Phone pe):
ஆன்லைன் ஷாப்பிங் ஜாம்பவான் ஃப்ளிப்கார்ட்டின் ஆன்லைன் வாலட் சேவைதான் ஃபோன் பே. இவர்களும் கேஷ்பேக் தந்து பயனர்களை கவர முன்வந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 21 வரை செய்யப்படும் முதல் ரீசார்ஜுக்கு 75 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். மற்ற சேவைகளைப் போல, இந்த கேஷ்பேக்கும் வாலட்டில் சேர்ந்துவிடும்.

அதிரடி ஆஃபர்களுக்குப் பெயர்போன , தனது பிளான்களில் சென்ற மாதம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. ஒவ்வொருமுறை ரீசார்ஜ் செய்யும்போதும் அதன் வேலிடிட்டி 28 நாள்களுக்கு மட்டுமே இருக்கும் என ஜியோ நிறுவனம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் புதிய அறிவிப்பின்படி, வேலிடிட்டி நாள்கள் மற்றும் டேட்டா சலுகைகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, ரூ.309 பிளானின் கீழ் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்வதாக வைத்துக்கொள்வோம். ஜியோவின் முந்தைய அறிவிப்பின்படி நாளொன்றுக்கு 1 GB அளவிலான 4G டேட்டா மொத்தம் 28 நாள்களுக்கு வழங்கப்படும். ஆனால், ஜியோவின் இந்த மாற்றத்தின்படி, நாளொன்றுக்கு 1 GB அளவிலான 4G டேட்டா மொத்தம் 56 நாள்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒரு நாளைக்கான டேட்டா அளவு முடிந்தபின்னரும், 128 kbps என்ற டேட்டா ஸ்பீடில் அன்லிமிட்டட் டேட்டாவைப் பயன்படுத்த முடியும். ஒரு மாதத்துக்கு மட்டுமே இருந்த பலன்கள், தற்போது இரண்டு மாதங்கள் வரை பிரைம் வாடிக்கையாளர்களுக்காக நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. ரூ.309/- முதல் ரூ.9,999/- வரையிலான அனைத்து ப்ரிபெய்ட் டேட்டா பிளான்களுக்கும் வேலிடிட்டி நாள்கள் மற்றும் டேட்டா சலுகைகள் நீட்டிக்கப்பட்டிருக்கின்றன.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author