அதிரை ஆலடிக்குளத்திற்கு தண்ணீர் திறப்பு! (படங்கள் இணைப்பு)

அதிரையை கடந்து செல்லும் நசுவினி ஆற்றுத்தண்ணீர் பல ஆண்டுகளாக அதிரையை அடுத்துள்ள கடலில் வீனாக கலந்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் பல சமுக ஆர்வலர்கள் அதனை நமதூர் குளங்களுக்கு திருப்புமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து கடந்த அதிரை சேர்மன் அஸ்லம் முயற்சியில் கடந்த ஆண்டு பம்பிங் மூலம் சி.எம்.பி வாய்க்கால் வழியாக அதிரை குளங்களுக்கு நீர் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக அதிரையில் நிலவிய வறட்சியின் காரணமாக குளங்கள் தண்ணீர் இன்றி காணப்பட்டன. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அதிரை சுற்றிவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நசுவினி ஆற்றில் தண்ணீர் வறத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கடலில் வீணாக கலக்கும் நீர் கடந்த ஆண்டை போன்று அதிரை குளங்களுக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிரை ஆலடிக்குளத்தை சிஎம்பி வாய்க்காலில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்  நிரப்பி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Close