புறக்கணிக்கப்படும் நடுத்தெரு!

அதிரை 14 வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு  EP மாடல் நர்சரி பள்ளி சாலையில் இருந்து வாய்க்கால் தெரு பள்ளிவாசல் வரை அமைக்கப்பட்டுள்ள அனைத்து மின்விளக்குகளும் பழுதாகி எறியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி மிகவும் இருட்டாக காணப்படுகின்றது.

பல நாட்களாக இப்பகுதியில் இந்த பிரச்சனை நீடித்து வந்தாலும் சம்பந்தப்பட்ட பொருப்பில் உள்ளவர்கள் இதனை கண்டுக்கொள்ளாமல் செல்கின்றனர் என்பது அப்பகுதியினரின் புகாராக உள்ளது. எனவே இப்பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தலையிட்டு இருட்டில் தவிக்கும் இப்பகுதிக்கு வெளிச்சத்தை கொண்டுவருமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Close