துபாயில் தமுமுக வின் இரத்ததான முகாமில் ஆர்வமுடன் கலந்துகொண்ட அதிரையர்கள்! (படங்கள் இணைப்பு)

தமுமுக துபை மண்டலம் சார்பாக துபை லத்திஃபா மருத்துவமனையில் 18-08-2017. வெள்ளியன்று மாபெரும் இரத்ததானம் முகாம் மண்டல தமுமுக தலைவர் அதிரை சாகுல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற முகாமில் துபையில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்

அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அப்துல் ஹாதி MBA அவர்களும் அமீரக தமுமுக துணை தலைவர் A.S இப்ராஹிம் MBA மற்றும் அமீரக துணை செயலாளர் கஸ்சாலி BE அவர்களும் , பனைக்குளம் நசீர் தொழிலதிபர் அபூதாகிர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்

துபை மண்டல தமுமுகவின் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் காலை
8 மணிக்கு மக்கள் ஆர்வமாக வர தொடங்கினர் மாற்றுமத சகோதரர்களும் அதிக அளவில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

 

Close