அதிரை செக்கடிக்குளத்திற்கு சீறிப்பாய்ந்து வரும் தண்ணீரில் துள்ளி விளையாடும் சிறுவர்கள் (படங்கள் இணைப்பு)

அதிரையை கடந்து செல்லும் நசுவினி ஆற்றுத்தண்ணீர் பல ஆண்டுகளாக அதிரையை அடுத்துள்ள கடலில் வீனாக கலந்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் பல சமுக ஆர்வலர்கள் அதனை நமதூர் குளங்களுக்கு திருப்புமாறு கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து கடந்த அதிரை சேர்மன் அஸ்லம் முயற்சியில் கடந்த ஆண்டு பம்பிங் மூலம் சி.எம்.பி வாய்க்கால் வழியாக அதிரை குளங்களுக்கு நீர் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக அதிரையில் நிலவிய வறட்சியின் காரணமாக குளங்கள் தண்ணீர் இன்றி காணப்பட்டன. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அதிரை சுற்றிவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நசுவினி ஆற்றில் தண்ணீர் வறத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கடலில் வீணாக கலக்கும் நீர் கடந்த ஆண்டை போன்று அதிரை குளங்களுக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிரை செக்கடிக்குளத்திற்கு சிஎம்பி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் அதிரை சிறுவர்கள் துள்ளிவிளையாடும் காட்சியை காணலாம்.

Close