அதிரையில் பட்டுக்கோட்டை MLA C.V.சேகர் ஆய்வு! (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டிணம் நசுவினி ஆற்றில் வீனாக கடலுக்குள் செல்லும் தண்ணீரை மோட்டார் (30Hp) மூலம் சுமார் 1800M தூரம் குழாய்கள் மூலம் கொண்டு வந்து பொதுப்பணித்துறை வாய்க்கால் வழியாக அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள குளங்கள்,ஏரி ஆகியவற்றில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

அதிராம்பட்டினம் பகுதியில் நிலத்தடிநீர் மட்டத்தை குறையாத வகையில் சுமார் 50 லட்சம் மதீப்பிடில் பேரூராட்சியால் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையில் பெய்த கனமழையால் சுற்றுவட்டாரப்பகுதியில் நீர்நிலைகள் நிரம்பியதை அடுத்து அதிரை செக்கடி மற்றும் ஆலடிக்குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V சேகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிரை முன்னாள் சேர்மன் அஸ்லம், நகர செயலாளர் A. பிச்சை, பட்டுக்கோட்டை நகர செயலாளர் சுப. இரஜேந்திரன் , M.A முஹம்மது தமீம், K. சிவக்குமார், J.ஹாஜா பகுருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Close