முத்துப்பேட்டையில் கெஜ்ரிவால் உருவ பொம்மை எரிப்பு, 50 பேர் கைது..!

முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி முதல்வரும் ஆம்அதமி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் தவறான விமர்சனம் செய்ததை கண்டித்தும் மன்னிப்பு கேட்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உருவ பொம்மையை எரித்து வட்டார காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் தலைமையில் நடைபெற்றது. 

நகரத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகி தாஹிர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான கோசங்கள் எழுப்பினர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் உருவ பொம்மையை தீயிட்டு கொலுத்தினர். 

இதனால் பழைய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் தடைபட்டது. இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகைதீன் பிச்சை, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி காந்தி நாராயணன், மாவட்ட செயலாளர் சுந்தர்ராமன், மற்றும் நிர்வாகிகள் தங்கராசு, கோவன்னா, திருநாவுக்கரசு, தஸ்தஹிர் உட்பட 50 காங்கிரஸார்களை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கைது செய்தார்.

Close