தூங்கும் அதிரை பேரூராட்சி! ஏங்கும் பொதுமக்கள்!

அதிரையில் பல ஆண்டுகளாக மிக முக்கிய குப்பை மேடாக மரைக்கா குளம் மேடு இருந்து வருகிறது. அப்பகுதியில் மக்கள் அங்கு கொட்டும் குப்பைகள் பல நாட்களுக்கு பிறகு அகற்றப்படுகின்றன. இதனால் தினசரி அந்த வழியாக கடந்து செல்வோர் அதிலிருந்து வரும் துர்நாற்றம் காரணமாக அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்த பிறகு அங்கு குப்பைகள் அகற்ற துப்புரவு பணியாளர்கள் வந்தாலும் முழுமையாக அவர்கள் குப்பைகளை அகற்றாமல் அரைகுறையாக அகற்றுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகம் முழுவதும் டெங்கு, ஜிகா உள்ளிட்ட கொடிய நோய்களின் தாக்கத்தினால் பலர் பாதிக்கப்பட்டு பலியாகி வரும் நிலையில், அதிரை பேரூராட்சியின் இந்த பொடுபோக்குதனத்தால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Close