அதிரை அருகே தொக்காளிக்காடு அணையில் ஆர்ப்பறிக்கும் தண்ணீர்! குவியும் அதிரையர்கள்!!! (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் கடந்த வாரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அதிரை மிகவும் செழிப்புடன் காட்சியளிக்கிறது. மேலும் அதிரையில் உள்ள நீர் நிலைகளும் நிறைந்து வருகின்றன.

இந்த தொடர்மழையால் அதிரை சுற்றியுள்ள ஆறுகளிலும் தண்ணீர் ஆர்பறித்து ஓடுகிறது. இதனால் அதிரை தொக்காளிக்காடு அணைக்கு தண்ணீர் படுவேகமாக வந்துக்கொண்டு இருக்கிறது.

இதனால் அதிரையர்கள் தொக்காளிக்காடு அணையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பு: அணையில் தண்ணீர் வேகம் அதிகமாக உள்ளது. சிறுவர்களும் வந்து குளித்து செல்வதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறுவர்களை தனியாக அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

Close