அதிரை ரோட்டரி சங்கம் நடத்திய பொது மருத்துவ முகாம்! (படங்கள் இணைப்பு)

அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொதுமருத்துவ முகாம் இன்று காலை 9:30 மணியளவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. இதனை நகர ரோட்டரி சங்க தலைவர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் நவாஸ் கான், பொருளாளர் அஹமது மன்சூர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மதியம் 1 மணியளவில் நிறைவடையும் இந்த முகாமில் இருதய மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் உடல் எடை, இரத்த அழுத்தம், சர்க்கரை, ஈ.சி.ஜி ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட.

Close