அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மைதானத்தில் தேங்கிக்கிடக்கும் தண்ணீர்! மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக குளங்கள் நிறைய தொடங்கியுள்ளன. அவற்றுக்கு இணையாக காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி மைதானத்திலும் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக மழைக்காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் இங்கு அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொசுக்களினால் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட நோய்களால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது போன்ற நோய்கள் மாணவர்களையும் தாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் இந்த விசயத்தில்  தலையிட்டு மைதானத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவது மட்டுமில்லாமல், இனிவரும் காலங்களில் அதிகம் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

Close