அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அறிவிப்பு!

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் மூன்றாண்டு பதவிகாலம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று மாலை 4:30 மணிக்கு சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் முஹல்லா வாசிகள் செப்டம்பர் 3 ஆம் தேதிக்குள் விருப்ப மனுவை சங்கத்தில் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் முஹல்லாவாசிகள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Close