Dr.Pirai – கை சுத்தத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோம்

“அழுக்கான எதையும் தொடவில்லை, பிறகு ஏன் கை கழுவ வேண்டும்?!”

சுவையான கேக்கை கையில் எடுத்து சாப்பிட்ட பிறகு இதுதான் உங்கள் மனதில் தோன்றும் இல்லையா! கொஞ்சம் பொறுங்கள்! இது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கை பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கிறது, துர்நாற்றமும் இல்லை, அப்படியானால் கை உண்மையிலேயே சுத்தமாக இருக்கிறதா?

கழிப்பறை இருக்கையில் இருக்கும் கிருமிகளைவிட, நம் கைகளால் எப்போதும் தொட்டுக்கொண்டிருக்கும் செல்போனில் அதிக கிருமிகள் இருக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. ஆம்! நம்பமுடியவில்லையா! உண்மைதான். சாப்பிடும்போது நீங்கள் எத்தனை முறை ஃபோனைப் பயன்படுத்துவீர்கள் என்று ஞாபகம் வருகிறதா?

கை சுத்தம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 அடிப்படை விஷயங்கள் (Here are ten basic things to remember about hand hygiene):

  • மருத்துவத் துறையில் இருப்பவர்கள் மட்டுமே கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே இது முக்கியம்.
  • நீண்ட விரல் நகங்கள் பார்க்க அழகுதான்! ஆனால் நக இடுக்குகளில் கிருமிகள் அதிக அளவில் இருக்கும்.
  • உங்கள் லேப்டாப், செல்போன் போன்றவை பார்ப்பதற்கு சுத்தமாக இருப்பது போன்று இருந்தாலும், அவை அவ்வளவு சுத்தமாக இருப்பதில்லை.
  • உங்கள் வீட்டு செல்ல நாய் (எல்லா செல்லப் பிராணிகளுமே) பார்ப்பதற்கு சுத்தமாக இருப்பது போன்று தெரியலாம், ஆனால் எண்ணற்ற ஒட்டுண்ணிகள் அவற்றின் மேல் இருக்கலாம், அவை அவற்றின் சருமத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும்.
  • கைகளால் மறைத்தபடி தும்மிய பிறகு, கைகளைத் துடைத்துக்கொண்டால் கிருமிகள் செத்துவிடும் என்று நினைக்கிறீர்களா!
  • இன்ஃப்ளுயன்சா, கண்நோய், ஜலதோஷம், இருமல் போன்ற பொதுவான நோய்கள் கைகள் மூலமாகப் பரவுகின்றன.
  • நீங்கள் சாப்பிடும் உணவுகள் மூலமாகவும் எண்ணற்ற கிருமிகள் பரவக்கூடும். சமைக்காத இறைச்சியை கையால் தொட்ட பிறகு கைகளைக் கழுவ வேண்டியது மிக முக்கியம்.
  • கைகளைக் கழுவிய பிறகு மீண்டும் குழாயைத் தொட்டால் மீண்டும் கைகள் அழுக்காகும்.

கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, நோய்கள் வராமல் தடுப்பது மட்டுமின்றி, நம்மிடமிருந்து பிறருக்கு நோய்பரப்பும் கிருமிகள் பரவும் ஆபத்தையும் குறைக்கும்.

Close