சவூதி அரேபியாவில் ஹஜ் பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சவுதி அரேபியாவை பொருத்தவரை அங்கு வாராந்திர விடுமுறை நாட்களைத் தவிர்த்து ஏனைய பொது விடுமுறை நாட்கள் வரைமுறைப்படுத்தப்பட்டது. அங்கு மன்னரே மறைந்தாலும் பொது விடுமுறை கிடையாது.

என்றாலும் ரமலானையொட்டி வரும் நோன்புப் பெருநாளிற்கு சுமார் 1 வார காலமும், ஹஜ்ஜூப் பெருநாளிற்கு சுமார் 2 வாரங்களும் விடுமுறை விடப்படும். (தனியார் நிறுவனங்களின் விடுமுறைகள் நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும்) அந்த நடைமுறையில், இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை நாட்களாக துல்ஹஜ் பிறை 2 முதல் பிறை 18 வரை என தொடர்ந்து 16 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் பணி துல்ஹஜ் பிறை 19 முதல் துவங்கும்.

இந்த வருட ஹஜ்ஜூப் பெருநாள் எதிர்வரும் 01.09.2017 (துல்ஹஜ் பிறை 10) வெள்ளிக்கிழமை அன்று அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. (துல்ஹஜ் பிறை எதிர்வரும் 21.08.2018 அன்று பார்க்கப்படும்)

ஹஜ்ஜூப் பெருநாளுக்கு முன்தினம் ஹாஜிகள் அனைவரும் அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடும் தினத்தில் ஹஜ்ஜூக்கு செல்லாத பிற முஸ்லீம்கள் அனைவரும் அரஃபா நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதால் அனைவரும் நோன்பு நோற்று நன்மைகளை பெற்றுக் கொள்ள மறக்க வேண்டாம்.

Close