உள்ளூர்

பட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் (படங்கள் இணைப்பு)

ஓய்வூதியப் பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்னர் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் இப்போது 5 லட்சம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஊதியத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.18 ஆயிரத்து 300 கோடி. இந்த பணம் அனைத்தும் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை ஒப்படைக்கவில்லை.

இந்த பணம் எங்கே? என்பதற்கு இதுவரை பதில் இல்லை. இந்த திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்கும் இந்த ஓய்வூதியம் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் பாராளுமன்றத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதாக கூறியபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்றார். ஆனால் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

எனவே தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Close