சூரியனை சுற்றி வரும் குறுங்கோளுக்கு சவூதி மாணவி பாத்திமா அல்-ஷைக் பெயரை வைத்த நாசா!

“தாவரவியல்” தொடர்பான ஆராய்ச்சியில் உலக அளவில் வெற்றி பெற்ற சவூதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஞ்ஞானி சகோதரி பாத்திமா அஷ்-ஷைக்கை கவுரவிக்கும் பொருட்டு, அமெரிக்காவின் நாசா, ஒரு குறுங்கோலுக்கு அஷ்-ஷைக் (Al-Sheikh 33535) என்று பெயரிட்டுள்ளது.

அதேபோல் சிலமாதங்களுக்கு முன்பு மற்றொரு சவூதி மாணவி, நாசாவினால் நடத்தப்படும் உலக அறிவியல் மற்றும் பொறியியல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த “கலாம்சாட்” புகழ் ரிபாத் ஷாரூக்கின் சாதனை நாம் அனைவரும் அறிந்ததே.

Close