POLITICSஉள்ளூர்

அதிரையில் TTV தினகரனின் உருவ பொம்மையை எரித்து அதிமுக வினர் ஆவேசம் (படங்கள் இணைப்பு)

அதிமுக-வின் ஓபிஎஸ் மற்றம் ஈபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. அப்போது பேசிய அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம், அதிமுகபொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பொதுச்செயலாளரை நீக்க வேண்டுமானால் அதிமுக-வின் பொதுக்குழு கூட வேண்டும். எனவே பொதுக்ழுழு விரைவில் கூடும் போது அதிமுக பொதுச் செயலாளரரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வைத்திலிங்கம்நீக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். பொதுச் செயலாளர் சசிகலா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிரை பேருந்து நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் பிச்சை, துணை செயலாளர் அஹமது தமீம் ஆகியோர் தலைமையில் அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தினகரனுக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

Show More

Related Articles

Close