மக்காவில் வஃபாத்தான தமிழக ஹாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது..!

ஆகஸ்ட் 22,2017 அன்று இரவு திருவள்ளூரை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற ஹாஜி மக்காவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மரணித்த ஹாஜி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலிருந்து இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் மக்கா தமிழ் பிரிவை சார்ந்த தன்னார்வலர்கள் நேரடியாக கவனித்து வந்தனர்.

கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் ஹாஜியின் உயிர் பிரிந்ததன் பின்பு அவரது ஜனாஸா உடலை பெற்று அவர் சார்ந்த கோப்புகள் அனைத்தும் சரி பார்த்து பின்பு இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தன்னார்வலர்கள் அஸர் தொழுகைக்கு பின் மக்கா புனித ஹரம் மஸ்ஜிதில் தொழ வைக்கப்பட்டு, ஸரஃபியாவில் உள்ள அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்..

அன்னாரின் மறுமை வாழ்விற்கும், இரவு பகல் பாராது செயலாற்றிய இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தன்னார்வலர்களுக்கும் துஆ செய்வோமாக..!

-இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம்
மக்கா தமிழ் ஊடக பிரிவு.

Close