இந்துக்கள் பகுதியில் இஸ்லாமியர்களுக்கு வீடு கூடாது – பாஜக எம்.எல்.ஏ!

குஜராத் மாநிலம் லிம்பாயட் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சங்கீதா பாட்டீல். இவர் சூரத் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், இந்துக்கள் அதிகம் வசித்து வந்த சூரத் நகரத்தின் லிம்பாயட் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகளவில் குடியேறி வருவதாகவும், இதனை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோவிந்த் நகர், பாரதி நகர், மதன்புரா மற்றும் பவன் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் இந்து சமூகத்தினர் பெருமளவு வசித்து வந்ததாகவும், தற்போது இந்த பகுதிகளில், இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வீடுகளை வாங்கி குடியேறி வருவதாக அவர் கூறியுள்ளார். இப்படி குடியேற்றம் நடப்பதால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் அபாயம் எதிர்காலத்தில் ஏற்படும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Close