உள்ளூர்

அதிரை ரயில் நிலையம் அருகே இருந்த பழமையான ஆலமரம் வெட்டி அகற்றம் (படங்கள் இணைப்பு)

அதிரை, பட்டுக்கோட்டை சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கனவான அகல ரயில் பாதை திட்டம் இன்னும் சில மாதங்களில் நனவாக உள்ளது. அதற்கு உண்டான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் ஏராளமான சிறிய மற்றும் பெரிய ரயில் பாலங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. பட்டுக்கோட்டையில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு, ரயில்நிலைய புணரமைப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதிரையிலும் அகல ரயில்பாதைக்கான தண்டவாள கம்பிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ரயில் பாதையை மேடாக்குவதற்காக தற்பொழுது ஜல்லி மற்றும் செம்மண் அடிக்கப்பட்டு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பழைய ரயில் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு புதிதாக கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரயில் நிலையம் அருகே இருந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஆலாமரம் வெட்டி அகற்றப்பட்டது.

Show More

Related Articles

Close