அதிரை காவல் நிலையம் முன் பரபரப்பு!

அதிரையில் நேற்று (28.08.17) காலை தனியார் பேரூந்து பெண்ணை மோதியதால்  பொதுமக்கள் அந்த பேரூந்தை சிறை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாதிக்கபட்ட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

இந்நிலையில் காவல் நிலையம் எதிரில் நிறுத்தபட்டிருந்த பேரூந்து அந்த இடத்தை விட்டு எடுத்து செல்லபட்டது. அதை ஓட்டுனரே காவல் துறை அனுமதி இன்றி எடுத்து செல்லபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பாதிக்கபட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்தபட்டது பேரூந்து காவல் துறை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதனால் இன்று (29.8.17) நள்ளிரவு 12 மணியளவிலும் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Close