அதிரையில் சுற்றுச்சூழல் மன்றத்தினால் நடத்தப்பட்ட டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்!

அதிரையில் சுற்றுசூழல் மன்றம் 90.4 கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு ஊர் சுகாதாரம் சார்ந்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று பேரூந்து நிலையத்தில் துவங்கி  9 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.

இதில் சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தினரால் விழிப்புணர்வு பிரச்சாரம் சிறப்பாக நடந்து முடிந்தது.

மக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இம்முயற்சி பெரும் உதவியாய் அமைந்துள்ளது.

 

Close