அதிரையில் முழு வீச்சில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணி (படங்கள் இணைப்பு)

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை சார்பாக டெங்கு கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அதிரையில் டெங்குவை கட்டுப்பட்டுத்தும் வகையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு முகாம் அதிரையில் இன்று நடைபெற்றது. ஊரில் கொசுக்கள் உற்பத்தியாகும் நீர் தேக்கங்கள், குப்பை தொட்டிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

அத்துடன் ஊர் முழுவதும் இருந்த குப்பைகள் அதிரை பேரூராட்சி துப்புரவு ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகிறது. அத்துடன் டெங்கு காய்ச்சல் பறிசோதனை முகாம் அதிரை கரையூர் தெரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. அப்போது பள்ளி மாணவர்களுக்கு டெங்கு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தற்போது டெங்கு காய்ச்சல் குறித்தும் தவிர்க்கும் முறைகள் குறித்தும் 50 ஊழியர்கள் மூலம் ஊரில் வீடு விடாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Close