உங்க ஆதார் பான் கார்டுகளை இணைத்துவிட்டீர்களா?

Want create site? Find Free WordPress Themes and plugins.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் உத்தரவிட்டது. இதன் மூலம் போலி பான் கார்டுகள் நீக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முன் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் கடைசி நாளாக இருந்தது. ஏராளமானோர் வருமான வரித்துறை இணைய தளத்தில் முட்டி மோதியதால், அந்த இணைய தளம் முடங்கியது. இதைதொடர்ந்து பான் கார்டுடன் ஆதார் இணைக்க, ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. இதன் பிறகு ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இணைக்காதோர், income taxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் ‘linkaadhaar’ என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்து, அதில் கூறப்பட்டுள்ள வகையில், இருஎண்களை இணைக்க முடியும். மொபைல் போனில், UIDPAN என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு, ஆதார் எண், மீண்டும் இடை வெளிவிட்டு பான் எண் ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு அனுப்பினால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்துவிடலாம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author