அத்திவெட்டி கால்பந்தாட்ட தொடரின் காலிறுதியில் அதிரை SSMG அணி விளையாடிய போட்டி ட்ராவில் முடிந்தது…!

அத்திவெட்டி கால்பந்தாட்ட தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் அதிரை உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கலந்துகொண்ட அதிரை SSMG அணியினர் இன்று காலிறுதி சுற்றில் தஞ்சை நேதாஜி அணியை எதிர்கொண்டனர்.

இதில் ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை அடித்தனர். இதையடுத்து நாளை இரு அணிகளுக்கும் இடையே மறு போட்டி மாலை 4:30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் வெற்றி பெற்று அதிரை SSMG அணியினர் கோப்பையை கைப்பற்ற அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close