காயல்பட்டினம் மீரா தம்பி படுகொலை குறித்து SRM உரிமையாளர் பாரிவேந்தரிடம் MLA அபூபக்கர் புகார்!

கடந்த 26.08.2017 அன்று காயல்பட்டி னத்தைச் சார்ந்த மீரா தம்பி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவ நடந்தது முதல் களத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆக்கப்பூர்வமான பணியை மேற்கொண்டு வருகிறது. தொடர் நடவடிக்கையாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று (29.08.17) கடம்பூர் செ. ராஜீ அவர்களிடம் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் MLA எடுத்துக் கூறினார்.

அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் விழா மேடையிலேயே சட்டமன்றத்தில் உமறு புலவர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என கோரிய போது உடனே உத்திரவு வழங்கியது போல
காயல்பட்டின சம்பவத்தில் உங்களின் (அபூபக்கர் MLA) கோரிக்கையையேற்று குற்றவாளிகளை பிடிக்கவும், உரிய இழப்பீடும் வழங்கவும் நான் நடவடிக்கை மேற்கொள்வேன் என அறிவித்தார்.

மேலும் இன்று SRM குழும நிறுவனர் பச்சமுத்து அவர்களை காட்டான்குளத்தூரில் உள்ள SRM அலுவலகத்தில் நேரில் சந்தித்து SRM பேருந்து ஓட்டுனர்,நடத்துனர் விதிக்கு மாறாக போதையிலிருந்த இரண்டு நபர்களை ஏற்றியதே பிரச்சனைக்கு காரணம் என்பதை எடுத்துக் கூறினார். மறைந்த மீரா தம்பி குடும்பத்தார்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்

கனிவுடன் கேட்ட பாரிவேந்தர் அவர்கள் அபூபக்கர் MLA வின் கோரிக்கையை ஏற்கிறேன் என கூறினார். உடன் காயல்பட்டினம் ஐக்கிய பேரவை துணைச் செயலாளர் நவாஸ், இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுத்தீன், துணைச் செயலாளர் இபுராகீம் மக்கீ, ஊடகப் பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் இருந்தனர்.

-அப்துல் ஜப்பார் (முஸ்லிம் லீக்)

Close