அதிரை அருகே பயங்கர தீ விபத்து!(படங்கள் இணைப்பு)

அதிரை அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதிரை அருகே துவரங்குறிச்சியில் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் இன்று மதியம் 2.00 மணி அளவில் பலத்த காற்று வீசியது இதில் அந்த தொழில் சாலையில் உள்ள மின் இணைப்பில் இருந்து தீ போரியல்கள் சுத்தம் செய்யப்பட்ட தேங்காய் நார் துகள்கள் மீது விழுந்தது. இதனால் அங்கு தீடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

காற்றின் வேகம் காரணமாக, தீ விபத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். தீயை கட்டுப்படுத்தினாலும், நார் துகள்களின் குவியலில் இருந்து தொடர்ந்து புகை வெளியேறிக்கொண்டே இருந்தது. குவியலுக்குள் நெருப்பு பரவிக்கொண்டு தான் இருந்தது. இதையடுத்து, தீயை முற்றிலும் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து தண்ணீரை பீச்சி அடித்தனர். இதனால் அந்த பகுதி பரப்பரப்பாக காணப்படுகிறது. 

-களத்திலிருந்து நமது நிருபர் மகேஷ்

Advertisement

Close