1387 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் கீழக்கரை பழைய ஜும்மா பள்ளி (வீடியோ இணைப்பு)

இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை ஓடக்கரை மஸ்ஜித் கி.பி 628-630 இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. இந்தியாவுக்கு கடல்வழியே வியாபாரம் செய்ய வந்த எமன் நாட்டு வியாபாரிகளால் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இது திராவிட- இஸ்லாமிய கட்டிட கலையின் பின்னணியிலேயே கட்டப்பட்டுள்ளது. சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிவாசல், கடந்த 1036 ஆம் ஆண்டில் புணரமைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பல வருடங்கள் கடந்தும் பழமை மாறாமல் இருக்கும் இந்த மஸ்ஜித் காண்பவர்களை பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு செல்கிறது. இந்த கட்டிட கலை மூலமாக நம் முன்னோர்களின் அறிவையும் தெளிவையும் புத்தி கூர்மையையும் தெரிந்து கொள்ளலாம்

பல நூறு வருடங்களை கடந்த மஸ்ஜிதுகளை கீழக்கரை மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்த கட்டிடத்தின் பிரம்மிப்பால் பல திறமையான கட்டிட கலைஞர்கள் இதன் திடத்தண்மையை ஆய்வு செய்து சென்றுள்ளனர்.

 

Close