அனிதா மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி அருகே CFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

நீட் என்ற ஆயுதத்தால் மாணவி அனிதாவை கொலை செய்த மத்திய மாநில அரசை கண்டித்தும் நீட்’லிருந்து நிரந்தர விலக்கு அளிக்ககோரியும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்.

அனிதாவின் மரணம் தற்கொலை இல்லை மாறாக மத்திய மாநில அரசு செய்த அரச பயங்கரவாத கொலை. அனிதாவின் படுகொலைக்கு மத்திய மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். அனிதாவின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு அளிக்ககோரியும் தமிழகம் முழுவதும் கல்லூரி வாயில்முனைகளில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்கள்  வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வாயில் முனையில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஹாவாஜா தலைமை தாங்கினார்.

கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் ரியாஸ் அஹமது சிறப்புரையாற்றினார். “மாணவர்கள் அனைவரும் இந்த அநீதியை எதிர்த்து போராட வேண்டும். நாம் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவதே அனிதா போன்ற மாணவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு. இந்த போராட்டம் தொடர்ச்சி தான் இதோடு நின்றுவிட போவதில்லை,  மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும், நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வரை மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்” என அவர் கூறினார்.இதில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்

 

Close