விமான டிக்கெட் பெற ஆதார் போன்ற அடையாள அட்டை நாளை முதல் கட்டாயம்!

விமான பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய விமான போக்கு வரத்து அமைச்சகம் சில புதிய முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி விமான டிக்கெட் முன்பதிவுக்கு அடையாள அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு பயணத்துக்கு அடையாள அட்டை இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடையாள அட்டை முறை அமலுக்கு வர உள்ளது.

அதன்படி விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார், டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட் அல்லது பான்கார்டு எண் விபரங்களை தெரிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாக்காளர் அடையாள அட்டையையும் இதில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி மத்திய மந்திரி ஜெயந்த்சின்கா கூறுகையில், “விமான பயணத்துக்கான அடையாள அட்டை விபரங்களை மத்திய அரசு தயாரித்துள்ளது. நாளை அவை வெளியிடப்படும் என்றார்.

தற்போது விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது போட்டோவுடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை கேட்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் வெளி நாடுகளில் விமான பயணத்துக்கு சீரான அடையாள அட்டை நடைமுறையில் உள்ளது.

இந்தியாவிலும் அடையாள அட்டை விவகாரத்தில் பாதுகாப்பான முறைகளை கையாள நாளை முதல் புதிய விதிகள் வருகிறது.

Close