சொந்த செலவில் குப்பை தொட்டி வைத்த அதிரையர்! வெளியில் குப்பை கொட்டும் சோம்பேறிகள்!

அதிரையில் உள்ள சுகாதார நிலை குறித்து நன் அனைவருக்கும் தெரியும். இது குறித்து பல்வேறு பதிவுகளை நமது அதிரை பிறை பதிவிட்டுள்ளோம். இதில் பொதுமக்கள் அதிரையின் சுகாதார சீர்கேடு குறித்த புகார்களுக்கு முன் வைக்கும் காரணம் பேரூராட்சி சரியில்லை. இதில் ஒரு பக்கம் உண்மை இருந்தாலும் பிறரை குறை சொல்லும் நாம் எந்த அளவுக்கு சரியாக நடந்துள்ளோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒரு நல்ல திட்டத்தை அறிமுகம் செய்தால் நாம் அதற்க்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். சுகாதாரம் குறித்து குறை சொல்லும் நாம் நமது சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்துள்ளோமா? என்றால் இல்லை. வீட்டில் உள்ள குப்பைகளை பாலிதீன் பையில் கட்டி வீட்டில் இருந்தே ரோட்டுக்கு எறிகிறோம். அது யார் மீது விழுந்தாலும் நமக்கு கவலையில்லை. வீட்டுக்கு குப்பை அள்ள வருபவர்களிடம் சரியாக குப்பையை கொடுக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.

இது போன்று அதிரை மரைக்கா குளம் அருகில் பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருவதும் அதனை பேரூராட்சி துப்பறவு ஊழியர்கள் நாள் கணக்கில் அல்லாமல் இருப்பதும் நீடித்து வந்தது. இதனால் துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லையால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இது குறித்து பல முறை பேரூராட்சிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிரையர் தனது சொந்த பொருட்செலவில் அங்கு ஒரு இரும்பு குப்பை தொட்டியை வைத்தார். இதில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த குப்பை தொட்டி வைக்கப்பட்ட பிறகும் கூட சிலர் வந்த வேகத்தில் குப்பை தொட்டியில் போடாமல் அதனை சுற்றிலும் அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

நாம் படத்தில் காண்பது ஒரு குப்பை தொட்டியில் கிடக்கும் குப்பைகளை விட அதனை சுற்றி ஏராளமான குப்பைகள் கிடக்கின்றன. இவற்றை குப்பை தொட்டியில் போடுவதற்கு ஒரு நிமிடம் தேவைபடுமா???

நாம் இப்படி நம்முடைய கடமையை செய்யாமல் இருக்கும் சூழலில் பிறரை குறை சொல்லி என்ன பயன்!!! சிந்திப்போம்!!!
நாம் திருந்துவோம்!!! நாடு திருந்தும்!!!

Close