முஸ்லிம் குழந்தைகளுக்கு குர்ஆன் ஓத கற்றுக்கொடுக்கும் இந்து மத சகோதரி பூஜா!

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா சஞ்சய் நகரை சேர்ந்தவர் பூஜா குஷ்வாகா. சிறுவயதிலேயே திறமையான அவருக்கு குர்ஆன் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு குர்ஆன் சொல்லித்தரும் சங்கீத பேகம் என்பவரிடம் குர்ஆன் கற்றுக்கொண்டார்.

இப்போது சங்கீதா பேகத்தால் குழந்தைகளுக்கு குர்ஆன் கற்றுக்கொடுக்க இயலாததால் இவரே குழந்தைகளுக்கு குர்ஆன் கற்று கொடுத்து வருகிறார். பெரும்பாலான குழந்தைகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களாலும் பணம் கொடுக்க இயலவில்லை, இவருக்கும் பணம் வாங்க விருப்பமில்லை என்கிறார்.

நாட்டில் மக்களை மதத்தால் கூறுபோடும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் இவரை போன்றவர்களால் மதநல்லிணக்கம் என்றும் நிலைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Close